டீசல் விலை உயர்வை கண்டித்து மினி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
டீசல் விலை உயர்வை கண்டித்து மினி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
ஏரல்:
ஏரல், புதுமனை, ஆலடியூர், அதிசயபுரம், வாழவல்லான் உள்பட பகுதிகளில் ஏராளமான செங்கல்சூளை மற்றும் சேம்பர் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் செங்கல் சூளை மற்றும் சேம்பருக்கு செங்கல் ஏற்றி செல்லும் மினி லாரி உரிமையாளர்கள் நேற்று திடீரென டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், வாடகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியிலுள்ள 40-க்கும் மேற்பட்ட மினி லாரிகள் ஓடவில்லை.
இதுகுறித்து ஏரல் சுற்று வட்டார மினி லாரி ஓட்டுனர்கள் சங்க தலைவர் முருகேசன் கூறுகையில், ‘டீசல், பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் முன்பு வாங்கிய வாடகைதான் இன்றும் வாங்கிக்கொண்டு மினி லாரிகளை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இது எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. வாடகையை உயர்த்த வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்’ என கூறினார். மேலும் இதை கண்டித்து இன்றும்(செவ்வாய்க்கிழமை), நாளையும்(புதன் கிழமையும்) ஏரல் பகுதியில் மினி லாரிகள் ஓடாது என தெரிவித்தார்.
Related Tags :
Next Story