லாரி கவிழ்ந்து மதுபாட்டில்கள் சேதம்
பூந்தமல்லியில் இருந்து நேற்று அதிகாலை மதுபான பாட்டில்களை ஏற்றி கொண்டு ராணிப்பேட்டைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை வழியாக ஒரகடம் அடுத்த வாரணவாசி அருகே செல்லும்போது திடீெரன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியில் இருந்து நேற்று அதிகாலை மதுபான பாட்டில்களை ஏற்றி கொண்டு ராணிப்பேட்டைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை வழியாக ஒரகடம் அடுத்த வாரணவாசி அருகே செல்லும்போது திடீெரன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்கள் உள்ள சரக்கு பெட்டிகள் சரிந்து விழுந்தன. கீழே விழுந்ததில் அட்டை பெட்டியில் இருந்த மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் மதுபானங்கள் கொட்டியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது டிரைவர் மூர்த்தி என்பதும், லாரியில் இருந்து 20 சதவீதம் அளவுக்கு மதுபாட்டில்கள் சேதம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story