திருச்செந்தூரில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில், தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், கேஸ்சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர் பாலசிங், ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்வரன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் வாழவல்லான் மகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story