சின்னசேலத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன் (வயது 35). இவர் பொற்படாக்குறிச்சி எல்லையில் தேர் செய்யும் பட்டறையில் வேலை செய்து வந்தார். வெங்கடேசன் நேற்று மாலை வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது சின்னசேலம் மார்க்கத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த ஜீப் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.