மாவட்ட செய்திகள்

குமராட்சி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி + "||" + Trapped at the wheel of the bus kills the girl

குமராட்சி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

குமராட்சி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
குமராட்சி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானாா்
காட்டுமன்னாா்கோவில்:

அரியலூர் மாவட்டம் வெண்ணங்குழியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மல்லிகா (வயது 45). இவர் தனது மகன் தனவேலுடன்(23) மயிலாடுதுறை மாவட்டம் தாண்டவன் குளம் பகுதியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தனவேல் ஓட்டினார். குமராட்சி அருகே கீழக்கரை பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டவுன் பஸ்சும், தனவேல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் உரசியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மல்லிகா, நிலை தடுமாறி கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கினார். 

சக்கரம் ஏறி இறங்கியதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் பாய்ந்து பெண் பலி
மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்
2. கார் மோதி பெண் பலி
விராலிமலை அருகே கார் மோதியதில் பெண் பலியானார்.