திருநீர்மலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறதா? ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னையை அடுத்த திருநீர்மலையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த திருநீர்மலையில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் விசாரித்தனர்.
முடிவில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருநீர்மலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய செங்கல்பட்டு கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரி, திருநீர்மலை பேரூராட்சி செயல் அதிகாரி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழு, திருநீர்மலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள், மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகள் போன்றவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை மார்ச் 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story