மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு. + "||" + Jewelry, money theft

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு.
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 53). விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார். நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். 
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.  அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.