அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 5:25 PM GMT (Updated: 22 Feb 2021 5:25 PM GMT)

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது.

சிவகங்கை, 
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
3 அம்ச கோரிக்கை 
சிவகங்கை மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். அகவிலையுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 
பஞ்சப்படியுடன், ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பாக்கியமேரி, மாவட்ட தலைவர் சாந்தி, மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வி, ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை வாழ்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமங்கலம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் வீரையா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உமாநாத் மற்றும் பலர் பேசினார்கள். போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story