மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Anganwadi workers wait struggle

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் தேவி, கவிதா, சுஜாதா, சிவகாமி, பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மாள், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் நஞ்சுண்டன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் அலமேலு நன்றி கூறினார். 
கோஷங்கள்
இந்த போராட்டத்தின் போது, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது பணி கொடையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.