செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:06 AM IST (Updated: 23 Feb 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரிமளம், பிப்.23-
அரிமளத்தை அடுத்த ஓணாங்குடி அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்தபடி கோவிலை சுற்றி வலம் வந்தனர்.அதன்பின் கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story