மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை + "||" + Suicide

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை
தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
க.பரமத்தி
சின்னதாராபுரம் அருகே உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி அருந்ததி (வயது 61) இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகனுக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தியடைந்த அருந்ததி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் பார்த்து அருந்ததியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அருந்ததி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்ன தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூலி தொழிலாளி தற்கொலை
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
2. வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
3. திருமணம் ஆகாததால் விவசாயி தற்கொலை
திருமணம் ஆகாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
4. பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மதுரையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
இளையான்குடி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.