மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகேவனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை + "||" + forester

அந்தியூர் அருகேவனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை

அந்தியூர் அருகேவனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை
அந்தியூர் அருகே வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர் அருகே வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வனக்காப்பாளர்
மதுரை மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நாகமலை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). திருமணம் ஆகாதவர். இவர் தனது தாயுடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காட்டூரில் குடியிருந்து வந்தார். சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அந்தியூர் வனத்துறை ஊழியர்கள் அந்தியூர் அருகே உள்ள கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.
விஷம் குடித்து தற்கொலை
அப்போது அங்கு பிரபாகரன் பிணமாக கிடந்தார். உடனே இதுபற்றி பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.