மதுரையில் கழிவுநீர் செல்லும் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை செய்யப்பட்டார்
மதுரையில் கழிவுநீர் செல்லும் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை
மதுரை
மதுரையில் கழிவுநீர் செல்லும் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தகராறு
மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்தவர் முத்தையா (வயது 38). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ரகு (28). இந்த 2 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்வதில் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முத்தையா, ரகு ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரகு, தன்னுடைய ஆதரவாளர்கள் சிலரை அங்கு அழைத்து வந்து, முத்தையாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
அடித்துக்கொலை
அப்போது ரகு மற்றும் அவருக்கு ஆதரவாக வந்த கும்பல் உருட்டுக்கட்டையால் முத்தையாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதித்த சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story