மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் + "||" + Meeting of Polling Agent

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் கிழக்குப் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மேற்குபகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி துணை செயலாளர்கள் செல்வகுமார், பால்பாண்டி, வட்டச் செயலாளர்கள் எம்.ஆர்.குமார், பொன்முருகன், திருநகர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, மக்களை நேரிடையாக சந்திக்கிற முகாம் நடத்தி அ.தி.மு.க.வின் சாதனைகளை வாக்குச்சாவடி முகவர்கள் கொண்டு செல்ல வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம்தான் முக்கியம். அதேபோல தேர்தல் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்களின் உழைப்பு அவசியம் என்றார்.