தந்தையை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது


தந்தையை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 1:57 AM IST (Updated: 23 Feb 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் கனகராஜ்(வயது 65). இவரது மகன் லோகேஸ்குமார்(19). இவர்  நேற்று தந்தை கனகராஜிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். அதன்பின் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கனகராஜ் தலையில் அடித்தார். இதில் கனகராஜ் படுகாயம் அடைந்தார். இதைெதாடர்ந்து லோகேஸ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதையடுத்து காயமடைந்த கனகராஜை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்- இன்ஸ்பெக்டர் கேசவராமசந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து லோகேஸ் குமாரை கைது செய்தனர்.

Next Story