விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் ஒரே நாளில் 2 அரசு பஸ்கள் ஜப்தி
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் ஒரே நாளில் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் ஒரே நாளில்
2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.
நஷ்டஈடு
கோவை, கணபதி, உதயா நகரைச் சேர்ந்தவர் சந்திரா (வயது 40). இவர் கடந்த 29-7-2004 அன்று அரசு பஸ்சில் கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தார். கணேசபுரம் என்ற இடத்தில் சென்றபோது பஸ்சும், எதிரே வந்த லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் சந்திரா படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான வழக்கு கோபி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த கோர்ட்டு, சந்திராவுக்கு ரூ.68 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு பஸ் நிர்வாகத்தினர் நஷ்டஈடு வழங்கவில்லை.
ஜப்தி
இதேபோல் குன்னூர், வெலிங்டனைச் சேர்ந்த ரமணி (48) என்பவர், கடந்த 15-11-2011 அன்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோபி கோர்ட்டு பாதிக்கப்பட்ட ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.13 லட்சத்து 52 ஆயிரத்து 289 நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு பஸ் நிர்வாகத்தினர் நஷ்டஈடு வழங்கவில்லை. இந்த 2 வழக்குகள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் கோபி கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு, நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று கோர்ட்டு ஊழியர்கள் கோபி பஸ் நிலையத்துக்கு சென்று கோபியில் இருந்து ஈரோடு மற்றும் கோபியில் இருந்து பொள்ளாச்சி செல்ல இருந்த 2 அரசு பஸ்களை ஜப்தி செய்தனர்.
Related Tags :
Next Story