மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + Struggle

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கொளுத்தும் வெயிலில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதிய குழுவில் அரசு ஊழியராக்குவேன் என அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். போராட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா பேசினார். மாநில பொருளாளர் தேவமணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கொளுத்தும் வெயிலில்
காத்திருப்பு போராட்டத்திற்கு சாமியானா பந்தல் போட போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் தரையில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தனர். பலர் சேலையால் தலையை மூடியபடி அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் குடையை பிடித்தப்படியும், துண்டால் தலையை மூடியபடியும், துணிப்பையை தலையில் வைத்தும் அமர்ந்திருந்தது பரிதாபமாக இருந்தது. ஒரு சிலர் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து மேலும் ஒரு விவசாயி தற்கொலை போராட்டக்களம் அருகே தூக்கில் தொங்கினார்
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டக்களம் அருகே மேலும் ஒரு விவசாயி தற்கொலை தூக்கில் தொங்கினார்.
2. வணிகர்களிடம் அதிகாரிகளின் அத்துமீறலை கண்டித்து போராட்டம்
தேர்தலுக்காக சோதனை நடத்தப்படும்போது, வணிகர்களிடம் பணம் பறிமுதல் செய்வதில் அதிகாரிகள் அத்துமீறலை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
3. தேர்தலுக்குப்பிறகு போராட்டம் தீவிரம் ஆகும்: ‘வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு’; டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
வெகு விரைவில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும், அதற்கான போராட்டம் தேர்தலுக்குப் பிறகு தீவிரமாகும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
4. தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்
நெல்லையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
5. தர்ணா நடத்தி சட்டசபையின் நேரத்தை வீணடித்துவிட்டது; காங்கிரஸ் மீது கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றச்சாட்டு
தர்ணா நடத்தி சட்டசபையின் மதிப்புமிக்க நேரத்தை காங்கிரஸ் வீணடித்துவிட்டது என்று கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.