மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை + "||" + younman sucide

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருவையாறு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருவையாறு:
திருவையாறை அடுத்த செம்மங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது  மகன் பிரபுதேவா (வயது25). இவர் டிப்ளமோ படித்துவிட்டு, கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் பிரபுதேவா கடந்த 6 ஆண்டுகளாக  ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு பிரபுதேவாவிடம் உன் தங்கை திருமணம் முடிந்தபிறகு உன் திருமணத்தை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த பிரபுதேவா நேற்றுமுன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை பொன்னாரை சுடுகாடு அருகே மாந்தோப்பில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உலகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உலகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அங்கு தூக்கில் தொங்கியது பிரபுதேவா என்று அவர் அடையாளம் காட்டினார். இதுகுறித்து  உலகநாதன் திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார்   வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து  பிரபுதேவா உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தேனியில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தேனியில் வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் கழுத்தை அறுத்துக்கொண்டு, தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்தால் விரக்தி அடைந்த வாலிபர், தனது கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டதுடன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.