முதல் கட்டமாக 10 குளிர்சாதன மாநகர பஸ்கள் இயக்கம்
முதல் கட்டமாக 10 குளிர்சாதன மாநகர பஸ்கள் இயக்கம்
மதுரை
சென்னை பெரு நகரங்களில் குளிர்சாதன வசதிகள் கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை போன்று மதுரை மாநகரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்கள் இயக்க கடந்த ஆண்டே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், மதுரை நகர் பகுதிகளுக்கு முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட பஸ்கள் இயக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரையிலும், மாட்டு்த்தாவணி பஸ் நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வரக்கூடிய காலங்களில் அடுத்தடுத்து இதன் சேவை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதன பஸ்சில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15-ம், அதிகபட்சமாக ரூ.50 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story