மாவட்ட செய்திகள்

ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி + "||" + Attempt to fire the oiler artist

ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி

ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி
ஒயிலாட்ட கலைஞர் தீக்குளிக்க முயற்சி
மதுரை
மதுரை சோழவந்தான் அருகே உள்ள மண்ணாடிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 68). ஒயிலாட்ட கலைஞர். மாணவர்களுக்கு ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை கற்று தருகிறார். இவர் தனக்கு கலைமாமணி விருது கேட்டு 2 முறை விண்ணப்பம் செய்து உள்ளார். ஆனால் அவருக்கு இந்த விருது வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நுழைவுவாயில் முன்பு திடீரென்று மண் எண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் அங்கிருந்த போலீசார், ராஜேந்திரனை மடக்கி பிடித்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். மேலும் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனக்கு கலைமாமணி விருது வழங்க வில்லை என்பதால் தீக்குளிக்க முயற்சித்தேன் என்று கூறியுள்ளார்.  போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பணி நிரந்தரம் செய்யக்கோரி டேங்கர் லாரி டிரைவர்கள் தீக்குளிக்க முயற்சி- கவுந்தப்பாடி அருகே பரபரப்பு
பணி நிரந்தரம் செய்யக்கோரி கவுந்தப்பாடி அருகே தனியார் நிறுவன டேங்கர் லாரி டிரைவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2. கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு -வீட்டுக்கடன் செலுத்த முடியாததால் தீக்குளிக்க முயன்றதாக தகவல்
வீட்டுக்கடன் திரும்ப செலுத்த முடியாததால் தீக்குளிப்பதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீக்குளிக்க முயன்ற டிரைவா்
ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
5. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி; நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டு
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.