மாவட்ட செய்திகள்

உடல் கருகி மூதாட்டி சாவு + "||" + Body charred grandmother death

உடல் கருகி மூதாட்டி சாவு

உடல் கருகி மூதாட்டி சாவு
திருச்சியில் குளியலறையில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
திருச்சி
திருச்சி மன்னார்புரம் நியூ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பாப்பாத்தி (வயது 65). இவர்களுக்கு 2 மகன்கள். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக அதே பகுதியில் வசித்து வருகிறார்கள்.
 இந்நிலையில் நேற்று காலை பாப்பாத்தி, மூத்த மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் வீட்டின் குளியலறையில் பாப்பாத்தி உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த குளியல் அறை உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாப்பாத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தீவைத்து கொளுத்தப்பட்டாரா? என தெரியவில்லை. அவரது சாவுக்கான காரணம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.