கோவிலூரில் முத்தமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் நிகழ்ச்சி


கோவிலூரில் முத்தமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Feb 2021 9:39 PM GMT (Updated: 22 Feb 2021 9:39 PM GMT)

முத்தமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

ஆலங்குடி
ஆலங்குடி அருகே கோவிலூரில்  முத்தமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பல வண்ண பூக்களை கொண்டுவந்து முத்துமாரியம்மன் கோவில் முன் உள்ள பிள்ளையார்கோவில் வைத்தனர். அந்தப் பூக்களை பெண்கள் தட்டுக்களில் வைத்து தாரை தப்பட்டை, வாணவேடிக்கையுடன் 4 தெருக்கள் வழியாகக் கொண்டுவந்து முத்துமாரியம்மனுக்கு சாத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் பூசாரி மற்றும் கோவில் டிரஸ்டிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்குச் சாற்றிய பூக்களை கூடைகளில் அள்ளி செங்கவளநாட்டுக் கிராமங்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் பூக்கள் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. காப்புக்கட்டிய மறுநாளிலிருந்து அம்மனுக்கு முறைப்படி மண்டகப்படி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் தேரோட்டமும், தொடர்ந்து ஜல்லிக்கட்டும் நடைபெற உள்ளது. மறுநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Next Story