மாவட்ட செய்திகள்

தென்காசி, வாசுதேவநல்லூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + In Tenkasi and Vasudevanallur, DMK workers staged a protest demanding the withdrawal of petrol and diesel price hikes.

தென்காசி, வாசுதேவநல்லூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, வாசுதேவநல்லூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி, வாசுதேவநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:

தென்காசி, வாசுதேவநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். திருச்சி சிவா எம்.பி., மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம், முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர் பஸ் நிலையம் அருகே தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வக்கீல் துரை தலைமை தாங்கினார்.  தி.மு.க. மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் தனுஷ்குமார் எம்.பி., முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.