மாவட்ட செய்திகள்

தென்காசியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா + "||" + Coronavirus infection has been confirmed in 3 new cases in Tenkasi.

தென்காசியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா

தென்காசியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
தென்காசியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 319 பேர் வீடு திரும்பி உள்ளனர். 34 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் இறந்துள்ளனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 47 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 214 பேர் இறந்துள்ளனர்.