மாவட்ட செய்திகள்

கழிவறை கோப்பையுடன் வந்தவர்களால் பரபரப்பு + "||" + Toilet cup

கழிவறை கோப்பையுடன் வந்தவர்களால் பரபரப்பு

கழிவறை கோப்பையுடன் வந்தவர்களால் பரபரப்பு
கழிவறை கோப்பையுடன் வந்தவர்களால் பரபரப்பு
திருச்சி
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புகார் மனு கொடுப்பதற்காக அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கம்பரசம்பேட்டை அருகே உள்ள பெரியார் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த மறுமலர்ச்சி தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் அணி துணை செயலாளர் சேகர் மற்றும் சிலர் புதிய கழிவறை கோப்பையை தூக்கி வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் பொதுமக்கள் பொது வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கம்பரசம்பேட்டை ஊராட்சியில் உள்ள நவீன கழிப்பிடத்தை பராமரித்தும் புதுப்பித்தும் இதுபோன்ற புதிய கழிவறை கோப்பை பொருத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர வேண்டும்' என்றனர். அதன் பின்பு கலெக்டர் அலுவலகத்தில் சென்று மனு கொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.