தேசிய செய்திகள்

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா + "||" + Maharashtra Minister Chhagan Bhujbal Tests Positive For Coronavirus

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா

மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா
மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி இவர் ஆவார்.
சகன் புஜ்பால் பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மந்திரிகள் உள்ளிட்ட பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே, நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், மந்திரிகள் சதேஜ் பாட்டீல், ராஜேந்திர சிங்னே, பச்சு கடு ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சேவும் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான சகன் புஜ்பாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலத்துடன் உள்ளேன்
இதுகுறித்து தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் அவர், "எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நல்ல உடல் நலத்துடன் உள்ளதால் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளவும். எல்லோரும் கவனமாக இருக்கவும். முககவசம், சானிடைசரை பயன்படுத்துங்கள்" என கூறியுள்ளார்.

மாநிலத்தில் இதுவரை துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் 7 மந்திரிகளை தொற்று தாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் கொரோனா தொற்றால் பாதிப்பு
தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு
ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு.
3. புதிதாக 1,399 பேருக்கு கொரோனா ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், நேற்று 1,399 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வரமறுத்த ஜெகபதி பாபு
பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5. 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா? - நிபுணர்கள் பதில்
3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும், 3-வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.