சட்டசபை தேர்தலையொட்டி சேலத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


சட்டசபை தேர்தலையொட்டி சேலத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 23 Feb 2021 5:10 AM IST (Updated: 23 Feb 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் சேலம் மாநகரத்தை பொறுத்தவரை அன்னதானப்பட்டி, டவுன், சூரமங்கலம், அம்மாபேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் சூரமங்கலம், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஈரோடு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக சேலம் மாநகருக்கு 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வந்துள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர்களுக்கு விரைவில் மாநகரில் பணியிடம் ஒதுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story