மாவட்ட செய்திகள்

ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது + "||" + 3 persons arrest

ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது

ஆடு திருடிய 3 வாலிபர்கள் கைது
சேலம் வீராணம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆடுகளை வைத்துக்கொண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (23), கோகுல்ராஜ் (25) என்பதும் அவர்கள் ஆடுகளை திருடிக்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.