மாவட்ட செய்திகள்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி 2-வது நாளாக விழவில்லை; பக்தர்கள் ஏமாற்றம் + "||" + Sunlight did not fall on the lingam on the 2nd day at Tharamangalam Kailasanathar temple; Devotees are disappointed

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி 2-வது நாளாக விழவில்லை; பக்தர்கள் ஏமாற்றம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரியஒளி 2-வது நாளாக விழவில்லை; பக்தர்கள் ஏமாற்றம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 நாட்கள் கர்ப்ப கிரகத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.
 இநத நிலையில் நேற்று முன்தினம் இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்த நிலையில், சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழவில்லை. நேற்றும் இந்த அரிய நிகழ்வை காண 2-வது நாளாக பக்தர்கள் திரண்டு வந்தனர். ஆனால் நேற்றும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழவில்லை. அலைமோதிய பக்தர்களின் கூட்ட நெரிசலால் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த ஒளியானது நந்தியின் மீது பட்டு கருவறை முன்பு உள்ள உண்டியல் வரை வந்து மறைந்துவிட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.