திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா சிறப்பு கூட்டம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா சிறப்பு கூட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 5:04 PM IST (Updated: 23 Feb 2021 5:04 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2020-21-ம் ஆண்டிற்கான இளையோர் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா சிறப்பு கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2020-21-ம் ஆண்டிற்கான இளையோர் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா சிறப்பு கூட்டம் நடந்தது. “நமது எதிர்காலம்” என்ற தலைப்பில் நடந்த இந்த கூட்டத்துக்கு, கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி அந்தோணி சகாய சித்ரா வரவேற்றார். தமிழ்த்துைற தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 44-ன் ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், “ மாணவர்கள் இந்த தொற்றுநோய் காலத்தில் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டார்கள். அவர்களை அழிவுக்கு கொண்டு செல்லக்கூடிய சக்திகள் என்ன? அதில் இருந்து எப்படி தங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என தெளிவாக எடுத்துரைத்தார். பேராசிரியர்கள் திலீப்குமார், செல்வகுமார், கருப்பசாமி மற்றும் பேராசிரியை பார்வதி தேவி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில், இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர் செயலர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

Next Story