மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 11:38 AM GMT (Updated: 23 Feb 2021 11:38 AM GMT)

மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

திருப்பூர்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 என்பதை ரூ.3 ஆயிரமாக உயர்த்த கோரியும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை என்பதை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரியும், தனியார் வேலைவாய்ப்பில் 5 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயபால், பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்துகொண்டனர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை குடியேறும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story