மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் + "||" + தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2-வது கட்டமாக நேற்று மீண்டும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 2-வது கட்டமாக நேற்று மீண்டும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ன் படி தனியார் துறையிலும் 5 சதவீதம் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.