10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் 7-வது நாளாக வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 7-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நீடாமங்கலம்:-
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 7-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வேலை நிறுத்தம்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட சலுகைகளான அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்றும் 7-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்காக தாசில்தார் அலுவலகம் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.
பொதுமக்கள் அவதி
நீடாமங்கலத்தில் தாசில்தார் மற்றும் சர்வேயர் மட்டுமே பணியில் உள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்களின் வேலை நிறுத்தம் காரணமாக உரிய நேரத்தில் சான்றிதழ்களை பெற வழியில்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளனர்.
Related Tags :
Next Story