சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதி


சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 23 Feb 2021 3:59 PM GMT (Updated: 23 Feb 2021 3:59 PM GMT)

நாகையில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்:
நாகையில் சாலையில்  சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றித்திரியும் குதிரைகள்
நாகை-காரைக்கால் சாலையில் ஏழைப்பிள்ளையார் கோவில், பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக நாகூர், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், புதுச்சேரி வழியாக சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு அதிக அளவில் பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர்.  
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கடந்த சில நாட்களாக குதிரைகள், மாடுகள், நாய்கள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக குதிரைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மாடுகள், குதிரைகள், நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குதிரைகள், மாடுகள் சாலை நடுவே படுத்துக் கொள்வதால் வாகனங்களில் வருபவர்கள் தெரியாமல் மோதி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள், மாடுகளை பிடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்

Next Story