அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு வட்டக்கிளை தலைவர் நாராயணன் வரவேற்றார். கோரிக்கைகள் குறித்து பட்டுவளர்ச்சித்துறை மாநில பொதுச்செயலாளர் நாகராஜ் பேசினார். மாவட்ட இணை செயலாளர்கள் திலீப், ராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story