2 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்து காலில் காயம்


2 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்து காலில் காயம்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:42 PM IST (Updated: 23 Feb 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் அ.ம.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அ.ம.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. 

திருப்பத்தூர் கவுதமப்பேட்டையை சேர்ந்த அ.ம.மு.க. மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் வானவராயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து கவுதமபேட்டையைச் சேர்ந்த சங்கர் (வயது 62) உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் வேலூர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த கூலிப்படையினர் தாமஸ் (28), சூர்யா (28) இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் இருந்தனர். அவர்கள் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் 2 பேரின் கால்களில் காயம் ஏற்பட்டது. 

அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  கட்டு போடப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். 


Next Story