மாவட்ட செய்திகள்

சீபம் கிராமத்தில்எருதுவிடும் விழாஹெலிகாப்டர் மூலம் மலர் தூவினர் + "||" + Bullfighting ceremony

சீபம் கிராமத்தில்எருதுவிடும் விழாஹெலிகாப்டர் மூலம் மலர் தூவினர்

சீபம் கிராமத்தில்எருதுவிடும் விழாஹெலிகாப்டர் மூலம் மலர் தூவினர்
எருதுவிடும் விழா
ராயக்கோட்டை:
சீபம் கிராமத்தில் எருது விடும் விழாவில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவை செல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார். முன்னதாக எருது விடும் விழா நடந்த பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. 
தொடர்ந்து, காளைகள் விழா திடலில் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அங்கிருந்த இளைஞர்கள் பிடித்து அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்கை தட்டிகளை பறித்து எடுத்தனர். காளைகளை அடக்க முயன்ற 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். 
பாதுகாப்பு
இந்த எருது விடும் விழாவை சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் உத்தனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எருது விடும் விழாவில் மாடு முட்டி 13 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டி 13 பேர் காயமடைந்தனர்.