மாவட்ட செய்திகள்

கிராமத்துக்கு பஸ் வராததால் பொதுமக்கள் திடீர் மறியல் + "||" + Public protest due to non-arrival of bus to the village

கிராமத்துக்கு பஸ் வராததால் பொதுமக்கள் திடீர் மறியல்

கிராமத்துக்கு பஸ் வராததால் பொதுமக்கள் திடீர் மறியல்
கிராமத்துக்கு பஸ் வராததால் பொதுமக்கள் திடீர் மறியல்
நயினார்கோவில்,பிப்.
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அஞ்சாமடை கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஞ்சாமடை கிராமத்துக்கு பஸ் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.  ஆனால் அதற்கு பிறகு ஒரு நாள் கூட அஞ்சாமடை கிராமத்துக்கு பஸ் வர வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மெயின் ரோட்டுக்கு வந்து அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் ஊருக்கு தினமும் பஸ் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்த நயினார்கோவில் போலீசார் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராமத்துக்கு பஸ் வருவதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.