மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration by the Motorists Association

வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி, பிப்.
காரைக்குடி டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம், அன்னை தெரசா சுற்றுலா கார், வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை சார்பில் காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் ஓனர் அசோசியேஷன் தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் மற்றும் பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மோட்டார் தொழிலை பாதிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும், சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கட்டாயம் என்பதை திரும்ப பெற வேண்டும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும், இ சலான் மூலமாக தேவையற்ற அபராதம் விதிப்பதை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அன்னை தெரசா ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் கருப்பையா, பொருளாளர் ஜெயக்குமார், அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை கவுரவ தலைவர் கருப்பையா, மாவட்ட பொருளாளர் மனோகரன், தலைவர் ராஜ்குமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ரோஜாமணி மற்றும் காரைக்குடி மக்கள் மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.