மாவட்ட செய்திகள்

விவசாயிகள் முந்திரி பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கலெக்டர் வேண்டுகோள் + "||" + Growing cashews can be more profitable

விவசாயிகள் முந்திரி பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கலெக்டர் வேண்டுகோள்

விவசாயிகள் முந்திரி பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கலெக்டர் வேண்டுகோள்
விவசாயிகள் முந்திரி பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாயல்குடி,பிப்.
விவசாயிகள் முந்திரி பயிர் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முந்திரி சாகுபடி கருத்தரங்கு
கடலாடியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான முந்திரி சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன் வரவேற்றுப்பேசினார்.
குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ராகவன், ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் சேக் அப்துல்லா, செயற்பொறியாளர் மாணிக்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
கடலாடி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி முன்னிலை வகித்தார். கருத்தரங்கை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-
தங்கம்
கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து அதிக அளவில் விவசாயத்திற்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, மண்ணில் உள்ள நீரின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் பாதிப்புகளை விளைவிக்கின்றன. ஆனால் சீமைக் கருவேல் மரங்களை சில சிறு விவசாயிகள் விறகு விற்பதற்கும், கரி எடுக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இவற்றின் மூலம் ஒரு ஏக்கரில் விறகுகளை விற்பதால் ரூ.2,500 மற்றும் கரி எடுப்பதால் ரூ.3,100 மட்டுமே லாபம் ஈட்ட முடியும். இவற்றுக்கு மாற்று யோசனையாக தரிசு நிலத்தில் தங்கம் என்று அழைக்கப்படும் முந்திரியை பயிரிடுவதால் அதிக அளவில் விவசாயிகள் வருவாய் ஈட்டுவது மட்டுமல்லாது அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் வழிவகை ஏற்படும்.
ரூ.40 ஆயிரம்
முந்திரி பயிர் அதிக அளவில் வெப்ப மண்டல பகுதிகளில் மிதமான காரத்தன்மை உடைய மண்ணிற்கு ஏற்ற பயிராகும். இப்பயிர் தமிழகத்தில் அதிக அளவில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகின்றன. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 160 எக்டேர் பரப்பளவில் மட்டுமே காணப்படுகின்றன.
சீமைக்கருவேல் மரத்திற்கு மாற்றாக, நாம் முந்திரி பயிரிடுவதால் 5 வருடத்திற்கு பின் ஒரு ஏக்கரில் சுமார் ரூ.40 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும். மேலும் பயிரிட்ட முந்திரி பயிரின் இடைவெளியில் உள்ள பரப்பில் ஊடு பயிர்களாக பயறு வகைகள் மற்றும் காய்கறிப் பயிர்களை பயிரிடுவதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்ட முடியும். முந்திரி பயிரிடுவதற்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 205 கன்றுகள் மற்றும் அதற்கான இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படுகின்றன.
பண்ணைக் குட்டை
மேலும் கருவேல மரங்களை அகற்ற வேளாண்மை துறையின் மூலமாக ரூ.10,000 அளவிற்கு மானியம் அளிக்கப்படும். வேளாண்மை பொறியியல் துறையில் ஒரு லட்சம் மதிப்புள்ள பண்ணை குட்டை அமைக்க வழிவகை செய்யப்படுகின்றன. 2021-22ம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் முந்திரி சாகுபடி கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டக்கூடிய முந்திரி பயிரினை பயிரிட்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முடிவில் கடலாடி தோட்டக்கலை உதவி இயக்குனர் டெலின்ஸ் நன்றி கூறினார்.