சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் மயானம் செல்லும் பாதை


சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் மயானம் செல்லும் பாதை
x
தினத்தந்தி 23 Feb 2021 7:36 PM GMT (Updated: 23 Feb 2021 7:36 PM GMT)

திருக்கடையூரில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் மயானம் செல்லும் பாதையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருக்கடையூர்:
திருக்கடையூரில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் மயானம் செல்லும் பாதையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
மயானம் செல்லும் பாதை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சியில் உள்ள கீழத்தெரு, மேலத்தெரு, மேலவீதி, சன்னதிதெரு, வடக்குவீதி, மெயின்ரோடு, ஆசுபத்திரிசந்து உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதிக்கான மயானம் அதே பகுதியில் உள்ள அம்மன் ஆற்றங்கரையோரம் உள்ளது. தற்போது பெய்த மழையால் இந்த மயானத்துக்கு செல்லும் பாதை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
தார்ச்சாலை
இந்த வழியாகத்தான் மயானத்துக்கு உடல்களை எடுத்து செல்ல வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். சேறு, சகதிைய கடந்து உடல்களை எடுத்து ெசல்வது பொதுமக்களுக்கு சிரமத்தை தருகிறது. 
சில நேரங்களில உடல்களை சுமந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கிறது. மயானத்துக்கு செல்லும் பாதையில் தார்ச் சாலை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் வேதனை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மயானத்துக்கு தார்ச்சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story