முதியவருக்கு 6 ஆண்டு சிறை


முதியவருக்கு 6 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 24 Feb 2021 1:46 AM IST (Updated: 24 Feb 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
பாலியல் தொல்ைல 
கடந்த 2018-ம் ஆண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருதுநகரை சேர்ந்த தொழிலாளியான வெள்ளை பாண்டியன் (வயது 65) என்பவர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
6 ஆண்டு சிறை 
இந்த வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி பரிமளா தீர்ப்பு அளித்தார். 
அப்போது வெள்ளை பாண்டியனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். 

Related Tags :
Next Story