மாவட்ட செய்திகள்

பந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா + "||" + the Srirangam Renganathar Temple Boat Festival

பந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா

பந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவையொட்டி பந்தக்காட்சியுடன் நம்பெருமாள் வீதி உலா வந்தார்.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்று பந்தகாட்சியுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். 

பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் எழுந்தருளி பந்த காட்சியில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். 

பின்னர் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.