மாவட்ட செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை வசூல்; 2½ கிலோ தங்கமும் கிடைத்தது + "||" + Rs 1 crore donation collected through bill at Samayapuram Mariamman temple

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை வசூல்; 2½ கிலோ தங்கமும் கிடைத்தது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடி காணிக்கை வசூல்; 2½ கிலோ தங்கமும் கிடைத்தது
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.1 கோடி காணிக்கை வசூல் ஆனது. மேலும் 2½ கிலோ தங்கமும் கிடைத்தது.
சமயபுரம், 
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாதம் இரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணைஆணையர் அசோக்குமார், திருவானைக் கோவில் உதவிஆணையர் மாரியப்பன், திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் பகுதி கோவில்ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 74 ஆயிரத்து 528, 2 கிலோ 533 கிராம் தங்கம், 3 கிலோ 784 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கிடைத்தது.