டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 24 Feb 2021 2:38 AM IST (Updated: 24 Feb 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மதுரை
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை வழிகாட்டு மையத்தின் துணை இயக்குனர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கிடையே, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இந்த வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முதல் நடக்கஉள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். தங்களது சுய விவரங்களை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story