கலெக்டர் அலுவலகம் முற்றுகை; சத்துணவு ஊழியர்கள் கைது


கலெக்டர் அலுவலகம் முற்றுகை; சத்துணவு ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 24 Feb 2021 2:38 AM IST (Updated: 24 Feb 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முற்றுகை; சத்துணவு ஊழியர்கள் கைது

மதுரை
சத்துணவு ஊழியர்கள் தங்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டபூர்வமான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட பேராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட துணைத்தலைவர் கவுரியம்மாள் தலைமையில் கலெக்டர் அலுவலம் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே கூடினார்கள். பின்னர் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். 
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வாசல் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்தனர். 
இதைதொடர்ந்து போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 276 சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story