மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்


மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 23 Feb 2021 9:25 PM GMT (Updated: 23 Feb 2021 9:25 PM GMT)

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்

உசிலம்பட்டி
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.
குடியேறும் போராட்டம்
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிர்வாகி முத்துகாந்தாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
இந்த போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர்கள் முதல் கட்ட போராட்டம் நடத்தினர். 
பேச்சுவார்த்தை
அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்த முடிவு எடுக்கப்பட்டவில்லை. இதைதொடந்து நேற்று இரண்டாம் கட்டமாக மாற்றுத்திறனாளி சங்கத்தினர்கள் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்தினர்.

Next Story