அ.தி.மு.க.வினர் 108 பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்


அ.தி.மு.க.வினர் 108 பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 Feb 2021 3:07 AM IST (Updated: 24 Feb 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் அ.தி.மு.க.வினர் 108 பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டுதல்

பழனி:


நாமக்கல் முன்னாள் எம்.பி.யான பி.ஆர்.சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க.வினர் 108 பேர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர்.

 அவர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவிலில் வழிபட்ட பின்னர் பழனி முருகன் கோவில் முடி காணிக்கை நிலையத்துக்கு சென்றனர். 

பின்னர் அ.தி.மு.க.வை சேர்ந்த 108 பேரும் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செய்தனர். 

இதைத்தொடர்ந்து அவர்கள் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வேலை மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.


இதுகுறித்து முன்னாள் எம்.பி.யான பி.ஆர்.சுந்தரம் கூறுகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வேண்டும் என்று பழனியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செய்தோம். 

பழனி முருகன் கோவிலில் வைத்து வழிபட்ட வேலை சென்னை சென்று எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.

Next Story