மாவட்ட செய்திகள்

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம் + "||" + Wildlife survey work is in full swing in the Western Ghats.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

கணக்கெடுப்பு பணி

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கடந்த 21-ந் தேதி தொடங்கியது.

இந்த பணியில் 40 தன்னார்வலர்கள், 60 வனத்துறை ஊழியர்கள் உள்பட 100 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 21 குழுக்களாக பிரிந்து அதாவது களக்காடு வனச்சரகத்தில் 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனச்சரகத்தில் 8 குழுவினரும், கோதையாறு வனச்சரகத்தில் 5 குழுவினரும் அடர்ந்த வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

புலிகளின் கால்தடங்கள்

நேற்று 3-வது நாளாக கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் மலையடிவார பகுதியான களக்காடு தலையணை வனப்பகுதியில் புலிகளின் கால்தடங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்திலேயே புலிகளின் கால்தடங்கள் கிடைத்துள்ளதால் வன ஊழியர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த கணக்கெடுப்பு பணியானது வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
குமரி மாவட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. முதல்நாளில் சிறுத்தை மற்றும் புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.