நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது


நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 24 Feb 2021 3:17 AM IST (Updated: 24 Feb 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது

நெல்லை:

நெல்லை கொக்கிரகுளத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சனா முதலியார் பாலத்தை ஒட்டி புதிய ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது. ரூ.18 கோடி செலவில் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரிப்பன் கட்டி வைத்திருந்தனர். முதல்-அமைச்சர் திறந்து வைத்ததும், அந்த ரிப்பனை அதிகாரிகள் அவிழ்த்து போக்குவரத்துக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் ஒரு வழிப்பாதை அடிப்படையில் வாகனங்கள் பயணிக்க தொடங்கியது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story